அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

12 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-1

ஓர் இறைவனின்..
இறுதி இறைத்தூதர்..
இஸ்லாத்தை இவ்வுலகில்..
போதித்தார்..

ஐந்து கடமையின்..
கண்ணாய் கனியானார்..

இறைவணக்கத்தில்..
நேரம் தவறாது நிறைத்தார்..

செல்வம் இருப்பதில்..
தர்மம் அளப்பதில்..
அறிவுபூர்வமான மார்க்கத்தை..
அறிமுகபடுத்தினார்..

ஏழ்மை -அறிய..
பசி உணர..
நோன்பின் நோக்கத்தை..
நுட்பத்தை நூதனமாய்..
அறிமுகபடுத்தினார்...

இறை இல்லம் தேடி..
இறை நம்பிக்கையாளர்கள் கூடி..
நிறம் பாராது மொழிபாராது..
சகோதரதுவத்தை..
சமர்ப்பித்தார்...

உரையாற்றுவதில்..
கம்பீர கலையானர்..

போர் தொடுப்பதில்..
வெற்றி வீரரானார்..

மாற்று இனத்தாரிடம்..
பண்பாளராய் விளங்கினார்..

நீதி செலுத்துவதில்..
வாய்மையாகவே..
வாழ்ந்தார்..

அதிபதியாய் இருந்தும்..
அடக்கத்தில் ஆட்சிசெய்தார்..

No comments:

Post a Comment