அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

09 February 2011

ஓய்யாத ஒப்பாரி...


வாக்கப்பட்டு போனவளே...
சோகம் கொண்டு வந்தவளே..

வரதட்சணை கேட்டாகளா..
வன் கொடுமை செய்தாகளா..
கொடுத்ததல்லாம் பத்தலயாமா....

குடிசை வீட்டு கோடிஸ்வரன்..
இருந்ததெல்லாம் கொடுத்தானம்மா..

வாயார வாழ்த்தினவுங்க எல்லாம்..
எங்கம்மா போனாங்க..

பெத்த மனம் பதருதடி..
தனியா வந்த உன்னை பார்த்து..

ஊர் வாய்யிம் ஒய்யாம..
உன் பேச்சு பேசுதடி..

நாட்டாம பஞ்சாயித்துன்னு..
நாம போய்யி நிக்கனுமடி..

வாழாம வந்துட்டான்னு..
வாய்கிழிய வசப்பாடுதடி..

மானம் கெட்டு மண்ணில் வாழ..
நம் மனசு பொருக்கலயடி..

செல்வம் கொடுத்து சேத்து வைச்சாலும்..
மனசு ஒத்து போகுமாடி..
இறக்கமில்லா மிருங்களோடு..
இனியும் வாழ...


No comments:

Post a Comment