அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

07 February 2011

சிறந்த வரிகள்..

பிறர்க்காக வருந்த முற்படு..
அடுத்தவர் உள்ளம் உனக்காக உதவும்...

ஒப்பனையிலும் உதட்டுச்சாயதிலும்..
உலாவரும் போலிமுகப்பெண்கள்..

தோல்வி ஏமாற்றம் அவமானம்..
இயந்திரவாழ்க்கையில் தினமும்..
நான் அனுபவிப்பவை...

வாழ வந்த வீட்டில்..
அவள் விருந்தாளி...

இருட்டு வெளிச்சத்தில்..
நிலவழகு..

நிலத்தில் விளையும்..
கட்டிடங்கள்...

நகை அணிந்த நகை கடை பொம்மை..
வாங்க முடியாத மகிழ்ச்சியில் நான்....

எனக்குள் விளையும் ஆசைகள்..
அனுபவிக்க முடியாத..
அதிஷ்டசாலி நான்..

சாதனை என்பது கேட்டு பெருவது அல்ல..
உழைத்து உயரத்தை தொடுவது..

விவசாய நாடு நம் நாடு..
விளைகிறது விலைவாசிகள் மட்டும்..

மறக்க நினைக்கிறேன்..
வாழ்ந்த உலகத்தை...

கற்று கொண்ட பாடம்..
பெற்று கொண்ட அனுபவம்...

பூக்கள் பறிக்கும் கைகளிள் ஆயுதம்..
அமைதி தொலைத்த உலகம்...

 நல்லவைகளை கற்று கொள்வோம்..
கற்றவைகளை கற்ப்பிக்க செய்வோம்..

No comments:

Post a Comment