அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

17 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-4

ஓர் இறைவனுக்கு..
இணைவைக்காமல் வாழ..
இயன்றளவு சொல்லளவு..
செயல்லளவு முடியும் வரை..
முறைபடுத்தினார்...

முன்னோர்கள் வாழ்ந்த..
அறியாமையை பட்டியலிட்டார்..

பொழியும் மேகம்..
உலவும் காற்று..
விளையும் பூமி..
வாழும் உயிரினங்கள்..
அத்தாட்சிகளாக ஆதரத்தோடு
அடையாள படுத்தினார்...

கண்ணுக்கு கண் கைக்கு கை..
காலுக்கு கால் உயிருக்கு உயிர்..
என்று கட்டளை சட்டம் பிறபித்து..
குற்றம்புரிய தூண்டும் எண்ணத்தை.
அடியோடு களையடுத்தார்...

ஓர் இறைவனுக்கு..
 நாம் எல்லோரும் -அடிமையே..
என்று-அகபாவம் ஆணவம்..
கர்வம் தலைகணம் ஆதிக்கமாய்..
இருந்த மனித உள்ளத்தில்..
இருந்து தகத்தெறிந்தார்...

அடுத்தவர் பொருளை அபகரிக்க..
அனுபவிக்க அனுமதி மறுத்தார்..

ஓர் இறைவன்..
சொன்னதையும் தடுத்ததையும்..
கண்டித்ததையும் கூட்டாமல்..
குறைக்காமல் பகுத்தறிவோடு..
பகர்ந்தார்....
அழகிய முன் மாதிரி முஹம்மத்...

No comments:

Post a Comment