அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

21 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-5

ஏக இறைவனின் மறையை ஏற்று..
போதிக்கும் பெரும் பாக்கியம் பெற்றார்..

மனிதர்களில் மாணிக்கம்..
மனித நேய மனம்..
மனித நேய குணம்..
மனிதனுக்கேற்ற மார்க்கத்தை..
மரபுகளோடு விரித்தார்..

மனித குலத் தந்தை..
ஆதம் ஹவ்வாவின் வாரிசுகளான..
நாம் எல்லோரும் சகோதர சகோதரிகளே..!
என்று நன்மாராயம் நவின்றார்..

ஆரத்தழுவும் கூட்டத்தாரை..
உருவாக்கினார்...

மறுமையில் சொர்க்கத்தின் மகத்துவத்தை..
நரகத்தின் கொடுமையை நேர்வழியில்..
நீதி நெறிவழியில் மனித உள்ளத்தில்..
பதிய வைத்தார்..

ஓர் இறைவனுக்கு..
சிறப்பான தூதராய்..
சிறம் பனிந்தார்..

விண்ணுலக பயணத்தின் காட்சியை.
சாட்சியாய் விபரமாய் விவரித்தார்..

துறவி வாழ்க்கை கூடாதன்று..
மனிததேவையை மனம் ஏற்கும்..
வகையில் மனம் திறந்து..
சொல்லலானார்..

ஏக இறையோனின் மாண்புகளை..
மனிதர்களின் பண்புகளை...
பிரித்து தெரிந்து தெளிந்து-அறிவித்தார்..

சொல்லும் செயலும் பதியவைக்கும்..
ஏக இறைவனை வணங்குமாறு..
அழைப்புவிடுத்தார்..
அழகிய முன் மாதிரி முஹம்மத்..


No comments:

Post a Comment