அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

11 February 2011

முயற்ச்சிப்போம் முடியும் !வரை....

பெற்றோரும் கற்றோரும்..
அறிந்தவரல்ல.....
படைத்தவனின் ரகசியங்களை...

முஹம்மத் நபிவழி வாழ்க்கை..
சொர்க்கத்தில் நாம்...

கண்ணீரில் கழுவிய பாவங்கள்..
மீண்டும் செய்யாமலிருக்க..

சூழ்நிலைகள்  மனித நேசத்தை..
போலியாக்கிவிடுகிறது...

புதுப்புது ஆசைகள் சொர்க்கவாழ்க்கை..
கேட்கிறது மார்க்கம் பேணாமல்..

நன்றி மறந்த மனிதர்கள்..
ஓர் இறைவனை ஏற்ப்பதிலிருந்து..

இறைச்சட்டம் பேணமுடியாத மனிதர்கள்..
மனிதச்சட்டத்தில் குற்றங்கள் குவிக்கிறார்கள்..

உண்மைக்கு நீதிதான் நிரந்திரமானது..
நீதிக்கு உண்மைதான் நிலையானது...

ஒன்று பட்ட சமுதாயம் ஒரணி குரல்..
நிறைவேறாத ஆசைகளாகவே இருந்தது...

தோற்றுபோனோம் மறுமை வாழ்க்கைக்கு..
நம்மை தயார்படுத்திக்கொள்ளாமல்...

மண்ணறையில் உதவுவோர் யார்?
மறுமையில் உதவுவோர் யார்?
மன்னிக்க கூடியவன் யார்?
தண்டிக்க கூடியவன் யார்?
அவன் ஒருவனே இறைவன்..

தவ்ஹீத் என்னும் தங்க விரிப்புத்தான்..
நம் வாழ்க்கை பாதை..
முயச்சிப்போம் முடியும்!வரை....


No comments:

Post a Comment