அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

24 February 2011

அழகிய முன் மாதிரி முஹம்மத்-6

கற்பனைக்க தெரியாத தூதர்..
மூடிமறைக்க தெரியாத தூதர்..
முழுமையான நிறைவான..
மகிழ்வான தீன்வழி திறந்தார்..


இறையளித்த மறைவசனங்களை..
இறையட்சத்தோடு எடுத்துரைத்தார்..

சீர்கெட்டு இருந்த சமுதாயத்தை..
சீரான மார்க்கம் கொண்டு..
சீர்படுத்தினார்..

இணைவைக்காமல் வாழ..
இனிய இஸ்லாம் மொழிந்தார்..

இறைதன்மையின் ஆற்றலையும்..
மனிததன்மையின் பலஹீணத்தையும்..
மறக்காத மறைக்காத மறுக்க முடியாத..
ஆதாரங்களை -அடுக்கிவைத்தார்..

ஏகத்துவத்தை ஏற்று..
ஏவினார்..

சொல்லாற்றலும் செயலாற்றலும்..
செம்மையாய் செய்தார்..

மனைவிமார்களின் வாழ்க்கையில்..
மனம் கோணாமல் நடந்து கொண்டார்..

உம்மி நபியாய் உத்தம நபியாய்..
உலகில் விளங்கினார்...

நீதியின் பக்கம் நிற்போராய்..
அநீதியை தடுப்பவராய்..
பகை மறபவராய்..
நல் உடையோராய்..
வெல் படையோராய்..
வாழ்ந்து காட்டினார்..

ஆளும் ஆட்சியாளனை..
அர்ஷின் அதிபதியை..
இறுதி நாளின் நீதியரசனை..
படைத்தவனை -அறிந்தவனை..
அளப்பவனை அழிப்பவனை..
மீண்டும் உயிர் எழுப்புபவனை..
வணங்கி வாழ்ந்து வாழச்சொன்ன..
அழகிய முன் மாதிரி முஹம்மத்...1 comment:

  1. அண்ணல் நபியவர்களின்
    பண்பியல்புகள்,
    அழகிய வசனக் கவிதையில்!
    தொடருங்கள்.

    ReplyDelete