அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

10 January 2011

நிகழ் காலத்தின் வெளிச்சம்....

இதுவும் ஒரு உண்மை..
மார்க்கத்தை புறந்தள்ளி விட்டு..
சமுதாய சீர்கேட்டை.....
காலகாலமாய் நடைமுறை படுத்தும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

சமாதிகளிள் கையேந்தி..
படைத்தவனிடம் சிபாரிசு..
செய்ய சொல்லும் அறியாமையிலும்..
நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை..

கட்சிகளாய் காட்சிகளாய்..
இயக்கங்களாய் பிரிவுகளாய்..
கோஷ்டிகளாய் துண்டு துண்டாய்..
சிதறி கிடக்கும் நம் பெருமக்கள்..
இதுவும் ஒரு உண்மை....

வரதட்சனை மனிதாபிமானம்..
தொலைத்த மனிதர்களின்..
மார்க்கம் அறியாத அல்லது..
அறிந்தும் அறியாத..
குருடர்களாய் செவிடர்களாய் பேரம்..
 பேசும் நம் பெருமக்கள்...
இதுவும் ஒரு உண்மை....

No comments:

Post a Comment