அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

18 January 2011

தேர்தல்-அரசியல்வாதிகள்-மக்கள்..

உள்ளம் உண்மை சுமக்கிறது..
நாக்கு மட்டும் மறுப்பு-அறிக்கை...

வாக்காளர்கள் வசதி பெருவார்கள்..
ஓட்டுக்கு விலை நிர்ணயம்..

வாக்காளருக்கு அளித்த வாக்குறுதி..
அன்றே அப்பவே நிறைவேற்றபட்டது...

தேர்தல் பிரச்சாரம் நடிகர் நடிகைகள்..
கூட்டகூட்டமாய் பொதுமக்கள்...

ஜாதி தலைவர்களுக்கு அவசர அழைப்பு..
ஆதரவு அளிக்க பல கோடியில் நன்கொடை...

தேர்தல் அறிக்கை..
மகிழ்ச்சியில்  பொதுமக்கள்..

தேர்தல் வாக்குறுதி..
மறந்துபோன பொதுமக்கள்...

வெள்ள நிவாரணம் பங்கீட்டு கொண்ட..
ஆட்சியாளர்கள் அதிகாரிகள்...

நல்ல பண்புள்ள நேர்மைகொண்ட...
அரசியல்வாதிகள்......
வேட்பாளராய் இருக்கும்வரை..

பதவி ஆசையில்லாத அரசியல்வாதிகளுக்கு..
பலகோடியில் சொத்து..

அமைச்சர் மறந்த தொகுதி..
நினைவூட்டிய நிருபர்கள்...

நல்லவைகளை செய்தால்..
குறை சொல்லும் அரசியல்வாதிகள்..
நல்லவைகளை செய்யாமல் இருந்தால்
குறை சொல்லும் பத்திரிக்கைகள்..

தேர்தல் ஆணையம் புதிய கட்டுபாடு..
அறிக்கையில் மட்டும் அரங்கேறியது..

அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்குகின்ற..
அனாதைகளை போல..
நல்லோர் ஆள ஏங்குகின்ற இந்தியா,,,,,

No comments:

Post a Comment