அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

06 January 2011

சிந்திக்க மட்டும்....

எழுதுகிறேன் எழுச்சி பெறாத...
என் சமூகத்தின் வெளிச்சத்தை...

அன்பை எல்லோரும் போதிக்கிறார்கள்..
போர் குணம் படைத்தவர்களாய்....

ஆசைக்கு எல்லாம் தேவை..
முடியாமைக்கு எல்லாம் தேவையில்லை...

குழந்தையின் கதறல்..
மறுக்கப்பட்ட தாய் பால்...

சிலர் எழுதுவதை..
பலர் படிப்பதில்லை....

அறிந்தவர்கள் செயல் படவில்லை..
அறியாதவர்கள் அறிய முற்படவில்லை...

கணத்துப்போன பாவங்கள்..
மறுமை குற்றவாளியாய் மனிதர்கள்...

நேசத்தை சந்தேகிப்பது நல்லது..
போலியை வெளிப்படுத்தும்...

தாய் சுமந்த தனயன்..
தனயன் செலுத்தாத நன்றி கடன்...

கற்காத கற்ப்பிக்கும்..
முயற்சியில் வெற்றி...

மாணவிகள் மாணவர்களை..
குறைவான மதிப்பெண் பெற..
வாய்ப்பளித்தார்கள்...

இளைஞர்களின் இளமை காலத்து கனவு..
கற்பனை இல்லாமல் இருந்தது...

மனிதர்களுக்கு மன்னிக்க தெரியவில்லை..
மன்னிக்க கூடிய ஓர் இறைவனிடம்..
மன்னிக்க கேக்கவும் தெரியவில்லை....

No comments:

Post a Comment