அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

21 January 2011

கற்பனையும் கருத்தும்....

ஊருக்கு போதித்தவர்..
உள்ளத்தால் உதவவில்லை...

அன்பை காட்டி கொண்டே இருங்கள்..
ஆரோக்கியத்தை பெற்று,,
கொண்டே இருப்பீர்கள்..

தர்மத்தை அளந்து கொடுங்கள்..
அன்பை அளக்காமல் கொடுங்கள்...

இரவு விழிக்கிறது உழைத்து,,
உயரவேண்டும் என்பதற்காக
லஞ்சம் வாங்கவும் ஊழல் செய்யவும்..
என்பதற்காக  அல்ல.....

திறக்காத நகை கடைபடி..
காத்திருக்கும் பெண்கள்...

பாலைவனத்தில் உழைத்து..
அனுப்பிய பணம்   நகை..
அழித்து அழித்து பன்னியவிரையும்..

குடிசைக்குள் மின்சார நிலா..
தேடுதலில் ஈடுபடும் பூனைகள்..

உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்..
மரணத்தில் சமமானான்....

அமைதியான முறையில் நடந்தது..
மதவாத கூட்டம்...

மக்கள் சக்தி இயக்கம்..
ஆட்டுமந்தைகளாய்..
மக்கள் இருக்கும் வரை..

தீண்டாமை திடலில்..
வாழ்க்கை விளையாடலில்..
வெற்றி கண்டது பெரும்பான்மை.....

1 comment:

 1. //குடிசைக்குள் மின்சார நிலா..
  தேடுதலில் ஈடுபடும் பூனைகள்..

  உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்..
  மரணத்தில் சமமானான்....//

  அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete