அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

22 January 2011

நம் குரல்....

ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரல்....
செவிடர்களாய் ஆட்சியாளர்கள்....

அனைத்து கட்சி கூட்டம்..
அப்பாவி மக்களின்..
அடுத்த கட்ட ஏமாற்றம்....

பொருப்பில்லாத மனிதர்களின்...
வெருப்பான செயல்கள்....

கையூட்டு வாங்காத அதிகாரி..
சக-அதிகாரிகளாள் சபிக்கப்பட்டார்...

விலைவாசி உயர்வு...
கனவில் வாங்கிய மளிகை சாமான்கள்....

கடமையை மறந்த மனிதர்கள்...
மறுமையை போதிக்கிறார்கள்...

இழக்க வேண்டியது தீண்டாமையை..,
பெறவேண்டியது சமத்துவத்தை....

நன்றிக்கு உதாரணம்...
நாய்கள் என்கிறார்கள்..

வாங்கிய சுதந்திரம் இரவில்...
சுரண்டும் கூட்டம் பகலில்...

ஒரு வீரனின் பேச்சி...
நடத்தையில் இல்லை....

மூடர்களுக்கு ஒரு பழக்கம்..
எல்லாவற்றையும் நம்பிவிடுவது..

பகுத்தறிவாதிகள்   என்று சொல்லி...
கொள்கிறவர்களுக்கு ஒரு பழக்கம்..
குதர்க்கமாகவே கேள்வி கேட்பபது...

ஏழைகளின் வருமை..
செல்வந்தர்களின் பெருமை....

நம் நாட்டில் நாம் வாழ...
நமக்கில்லாத உரிமை...

ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம்...
ஓர் இறை கொள்கையில் தீர்வு...

No comments:

Post a Comment